கதைச் சுருக்கம்
அ நிறம் | அளவு
பிரகாஷ்ராஜ், பூமிகா நடித்த, பெண் அடிமை இல்லை படத்தை தயாரித்த ரமணா பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு “தலைப்பு செய்தி“ என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ஜெகபதிபாபு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் லிங்கா படத்தில் வில்லனாக நடித்தவர். கதாநாயகியாக சார்மி நடிக்கிறார். மற்றும் சத்யபிரகாஷ், காந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். பிரேம்ராஜ் இயக்கியுள்ளார்.
நம்பர் ஒன் சேனலாக மாற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒரு டிவி நிர்வாகம் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அந்த டிவியில் செய்தியாளராக வேலை செய்யும் சார்மியிடம் ஒரு பென்டிரைவ் கிடைக்கிறது. அதில் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சிகரமானதாகும். அதை கைபற்ற நினைக்கும் சமூக விரோத கும்பலுக்கும், ஜெகபதிபாபு, சார்மிக்கும் இடையே நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் தலைப்பு செய்தி. படு ஆக்ஷன் படமாக “ தலைப்பு செய்தி உருவாகி உள்ளது.
இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
Advertisement
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.