Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/ராகு கேது பெயர்ச்சி பலன்கள்/கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : கும்பம்
04 பிப் 2019 to 21 ஆக 2020

முந்தைய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

கும்பம்

ராகு 5ம் இடமான மிதுன ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை உருவாகலாம்.

கேது 11ம் இடமான தனுசு ராசிக்கு சென்று பொருளாதார பலம், ஆரோக்கியத்தைக் கொடுப்பார். பொன்னும், பொருளும் சேரும். குடும்பத்தில் மேன்மை உண்டாகும்.  குருபகவான் உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து பொருள் நஷ்டம், மனசஞ்சலத்தை ஏற்படுத்துவார். ஆனாலும் அவரது 5ம் இடத்துப்பார்வை மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். மேலும் அவர் மார்ச் 13ல் இருந்து மே 19வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அவரால்  பொருளாதாரம் மேம்படும். 11ம் இடத்தில் இருக்கும் சனிபகவானால்  பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி நிலைக்கும்.

2019 பிப்ரவரி – அக்டோபர்
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். ஆடை, அணிகலன் சேரும். மே19 முதல் அக்.26 வரை பொறுமை தேவைப்படும். சுபநிகழ்ச்சிகள் தாமதப்படலாம். உறவினர் வகையில் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். ஆனால் இந்த காலத்தில் குருவின் 5ம் இடத்துப்பார்வையால் வருமானம் கூடும்.

பணியாளர்களுக்கு சகபெண் ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புண்டு. குருபகவானின்  வக்ரகாலத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

வியாபாரிகள் வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தைக் கொடுக்கும். கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழ் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். மே19 முதல் அக்.26 வரை சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

பெண்கள் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் காண்பர்.  சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.  சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.  குருவின் வக்கிர காலத்தில்  வேலையில் பொறுமை தேவை. முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். உடல்நலம் சிறப்படையும்.

2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
குருபகவான் சாதகமான பலனைத் தருவார். அவரது 7ம் இடத்துப்பார்வையால் முயற்சி வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தம்பதியிடையே அன்பு நீடிக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு.  2020 மார்ச் 26க்கு பிறகு செலவு விஷயத்தில் கவனம் தேவை.

பணியாளர்கள் முன்னேற்றமான பலனைக் காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும். குருவின் 9ம் இடத்துப் பார்வையால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 2020 மார்ச் 26க்கு பிறகு  வேலைப்பளு அதிகமாகும்.

வியாபாரத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். ராகு சாதகமற்று இருப்பதால்  மறைமுகப்போட்டி குறுக்கிடும்.

கலைஞர்களுக்கு இருந்து வந்த அவப்பெயர், போட்டிகள், பிரச்னை முதலியன அடியோடு மறையும்.  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள்,  பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர்.

மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண், போட்டியில் வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. கைவிட்டு போன பொருள் கிடைக்கும்.

பெண்களுக்கு வாழ்வு குதூகலமாக அமையும்.  சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். ஆடை, அணிகலன்கள் சேரும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவிஉயர்வு காண்பர். 2020 மார்ச் 26க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுக்கவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவை.

பரிகாரம்:
* ராகுவுக்கு அர்ச்சனையுடன் உளுந்து தானம்
* வெள்ளியன்று காளிக்கு எலுமிச்சை தீபம்
* சனிக்கிழமையன்று ஆஞ்சநேயர் வழிபாடு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap