/ஆன்மிகம்/சத்குருவின் ஆனந்த அலை/ஞானோதயம் அடைய கிருஷ்ணர் என்ன செய்தார்...ஞானோதயம் அடைய கிருஷ்ணர் என்ன செய்தார்...
ஞானோதயம் அடைய கிருஷ்ணர் என்ன செய்தார்...
ஞானோதயம் அடைய கிருஷ்ணர் என்ன செய்தார்...
ஞானோதயம் அடைய கிருஷ்ணர் என்ன செய்தார்...

கேள்வி: நமஸ்காரம் சத்குரு. ஞானோதயம் அடைய கிருஷ்ணர் ஏதேனும் ஆன்மீக சாதனையில் ஈடுபட்டாரா? இதுபோன்ற நிலையை அவர் எப்படி எட்டினார்?
சத்குரு: ஒரு மனிதர் ஒவ்வொரு நாளும், அவர் எழுந்த கணத்தில் இருந்து மீண்டும் தூங்கச் செல்லும்வரை அன்பாகவும் ஆனந்தமாகவும் இருப்பதே மகத்தான ஆன்மீக சாதனைதான். தன்னைச் சுற்றி மனிதர்கள் இருக்கும்போது சிரித்த முகமாகவும், யாரும் தன்னை கவனிக்கவில்லை எனும்போது சோகமே உருவாக முகத்தை தூக்கி வைத்துக்கொள்வதும், அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாய்க் காட்டிவிடும். தனியாய் விட்டுவிட்டால் மனிதர்களில் பெரும்பாலானோர் தாங்கமுடியா துன்பங்களாகிவிடுவர். ஆம்... உங்களால் தனிமையில் இருக்க முடியாத நிலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் தவறான சகவாசத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு நீங்களே சரியான சகவாசம்தான் என்றால், தனிமையில் இருப்பது மகத்தான விஷயமாய் இருக்கும்.
ஒத்திசைவில் வாழ்வது
உங்கள் இதயம் ஒரு நிமிடத்திற்கு 60 முறை துடித்தால், நீங்கள் இந்த பூமியோடு ஒத்திசைவில் இயங்குகிறீர்கள் என்று அர்த்தம். ஏதோ செயலில் ஈடுபடும்போது இந்த எண்ணிக்கையில் ஏற்றம் இறக்கம் இருக்கலாம், ஆனால், நீங்கள் ஓய்வாக இருக்கும்போது இதயத்துடிப்பின் எண்ணிக்கை 60 ஐவிட அதிகமாக இருந்தால், ஏதோ சரியாக இல்லை என்றுதான் அர்த்தம். இன்று ஆரோக்கியமாக இருக்கும் பலரின் இதயத்துடிப்பு 65 - 75 ற்குள் உள்ளது. இதுவே சூர்ய நமஸ்காரம், ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற மிக எளிமையான யோகப் பயிற்சிகளை 18 மாதங்களுக்கு நீங்கள் செய்துவந்தால் உங்கள் இதயத்துடிப்பு நிச்சயம் 60 ஆகிவிடும்.
கிருஷ்ணரின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட மாற்றம்
தனது 16 வயதுவரை கிருஷ்ணரின் ஆன்மீக சாதனை, தன்னைச் சுற்றி இருக்கும் படைப்போடு ஒத்திசைவில் இருப்பதிலேயே இருந்தது. அதன்பின், கிருஷ்ணரின் குரு சாந்திபாணி கிருஷ்ணரைச் சந்தித்து, அவரது வாழ்க்கை வெறுமனே ஆடிக் களிப்பதற்கல்ல, மற்றொரு பெரிய நோக்கம் இருக்கிறது என்று நினைவூட்டினார். கிருஷ்ணருக்கோ அதனை ஏற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அவர் வாழ்ந்து வந்த கிராமத்தின் மீதும், அதில் வாழ்ந்த மக்கள் மீதும் அவருக்கு அலாதி பிரியம் இருந்தது! தன்னைச் சுற்றி இருந்த அனைத்தோடும், அது ஆணோ, பெண்ணோ, விலங்கோ, குழந்தையோ... அனைவருடனும், எல்லாவற்றுடனும் அவர் முழுமையான ஈடுபாட்டோடு இருந்தார்.
வேறுவிதமான ஆன்ம சாதனை
இத்தனை ஆன்ம சாதனைகள் செய்தும், போர்கலைகள் கற்றும், கிருஷ்ணர் மென்மையாகவும் மிருதுவாகவும் இருந்ததற்குக் காரணம், அவரின் ஆன்ம சாதனை முற்றிலும் வேறுவிதமான கோணத்தில், மாறுபட்ட ஒரு தன்மையில் இருந்தது. குரு சாந்திபாணி அவருக்கு வழங்கிய சாதனைகள், பெரும்பாலும் உள்முகமாக செயல்படும் விதமாகவே வடிவமைத்திருந்தார். கிருஷ்ணர் துவாபர யுகத்தை சார்ந்தவர் இல்லை (அவரின் வாழ்வும் செயலும் அவர் சத்ய யுகத்தை சார்ந்தவர் போன்றே இருந்தது) என்பதால் அவருக்கு எல்லாம் மனதளவிலேயே நடந்தது. கிருஷ்ணருக்கு ஏதேனும் உணர்த்தவேண்டும் என்றால், குரு சண்டிபானி அதை வாய் திறந்து சொல்லவேண்டும் என்றில்லை. உணர்த்த வேண்டிய விஷயங்கள் அனைத்தும் மனதளவில் பரிமாறி, மனதளவில் உணர்ந்து, மனதளவிலேயே எட்டவேண்டிய இலக்குகளையும் எட்டினார் கிருஷ்ணர்.