ADDED : ஏப் 19, 2022 02:48 PM

ஒவ்வொரு நாளும் நாம் எதை எதையோ தேடி ஓடுகிறோம். எல்லாம் எதற்காக... நிம்மதிக்காக. ஒவ்வொருவருக்கும் பலவிதமான நிம்மதி தேவைப்படுகிறது. மாணவனாக இருக்கும்போது டிகிரி வாங்கினால் நிம்மதி. அந்த நிம்மதியும் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். பிறகு நல்ல வேலை கிடச்சா நிம்மதி என்று அடுத்ததை நோக்கி ஓடுவோம். இப்படி காலம் முழுவதும் நிம்மதியை தேடி ஓடுகிறோம். ஆனால் அது நம் உள்ளத்திலேயே இருக்கிறது. அது இறைவனால் மட்டுமே கொடுக்க முடியும்.