ADDED : செப் 10, 2023 05:55 PM
'ஈமான் என்றால் என்ன' என நபிகள் நாயகத்திடம் கேட்டார் ஒருவர். அதற்கு அவர், ''பொறுமையும், அளவின்றி பிறருக்கு வாரி வழங்குவதும் தான்'' என்றார்.
ஈமான் (நம்பிக்கை) எனப்படுவது இதுதான்: இறைவழியே சிறந்தது என்றும், அதில் செல்லும் போது தோன்றும் பிரச்னையை சகித்து, முன்னேறிச் செல்வதாகும். இதற்கு பெயர்தான் 'ஸப்ர்' (பொறுமை).
ஒருவர் தான் சம்பாதித்ததில் ஆதரவற்ற ஏழைகளின் நலனுக்காக செலவழித்து மகிழ்ச்சியடைவது. இதுதான் 'ஸமாஹத்' (அளவில்லாமல் கொடுத்தல்). இச்சொல் இனிய இயல்பு, பரந்த மனம் என்னும் பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.