ADDED : அக் 29, 2021 04:55 PM

வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று பலர் விரும்புவர். ஆனால் சிலரோ வந்தவர்கள் 'எப்படா வீட்டை விட்டு செல்வார்கள்' என காத்திருப்பர். சில வீடுகளில் வந்தவர்களை 'வாருங்கள்' என்றுகூட சொல்லமாட்டார்கள். இதில் ஒருவராக இருந்தால் அதை விட்டுவிடுங்கள்.
வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரித்து அனுப்புங்கள். ஒருமுறை நாயகத்திடம், ''நான் ஒருவரது வீட்டிற்குச் சென்றேன். அவர் என்னை உபசரிக்கவில்லை. அவர் என் வீட்டுக்கு வந்தால், நானும் உபசரிக்காமல் இருக்கலாமா'' என ஒருவர் கேட்டார்.
''அப்படி செய்யக் கூடாது. நீங்கள் எந்த நிலையிலும் அவரை உபசரித்தே தீர வேண்டும்'' என்றார். வீட்டுக்கு வரும் விருந்தினரை கவுரவியுங்கள். முகமலர்ச்சியுடன் பேசுங்கள். இதையே இறைவன் விரும்புகிறான்.