ADDED : நவ 12, 2021 12:57 PM

ஆணவம் என்பது தீய குணங்களில் ஒன்றாகும். ஆணவத்துடன் அலைபவனை உலகம் வெறுக்கும். 'நான் வைத்ததே சட்டம். நான் ஆணையிட்டால் எதுவும் நடக்கும்' என்று பலர் சர்வாதிகாரியாக செயல்படுவார்கள். 'என்னைக் கேட்க யாருமில்லை' என நினைப்பதே இதற்கு காரணம். இப்படிப்பட்டோர் விரைவில் அழிந்து விடுவர். எனவே ஆணவம் இல்லாமல் இருங்கள்.