சிறிய தோல் பையில் தேனைச் சேகரித்து வைக்கிறார்கள் மனிதர்கள். அந்தப்பையில் கிழிசல்களோ, துவாரமோ இல்லாமல் இருந்தால் மட்டுமே தேனை எடுத்து வைக்க முடியும். இதேபோல உள்ளம் என்பது ஒரு பை. அதில் அறிவு என்கிற தேன் சேர்த்து வைக்கப்படுவதால், அதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். உலக இன்பங்கள் அதைக் கிழித்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதில் அறிவுத்தேன் நிற்காது என்கிறார் ஈஸா நபி.