ADDED : அக் 27, 2023 11:23 AM
மனிதன் மென்மையான மனம் கொண்டவனாக இருக்க வேண்டும். மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தவன் ஆகிறான். இறைவன் மென்மையான இயல்புடையவன். அவன் மென்மையை விரும்புகிறான். வன்மைக்கும் மற்ற குணங்களுக்கும் தராத நற்கூலியை மென்மையை கைக்கொள்ளும் போது அவன் அருள்கிறான்.