ADDED : மே 03, 2024 08:58 AM
இஸ்லாம் என்ற அரபுச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், சரணடைதல், அடிபணிதல் எனப் பொருள். அதாவது இறைவனுக்கு கீழ்ப்படிந்தும், சரணடைந்தும், அடிபணிந்தும் மனிதன் நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இஸ்லாம் என்பதற்கு 'அமைதி' என்றும் பொருள் உண்டு. கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் உடலும் ஆன்மாவும் அமைதி பெறும்.