ADDED : ஏப் 18, 2024 02:38 PM
பத்ரு போரின் மூலம் குரைஷிகள் தங்களின் பலத்தை உணர்ந்ததால் தக்க ஆயுதத்தோடு முஸ்லிம்களை தாக்க முடிவெடுத்தனர். வீரர்களை உற்சாகப்படுத்த அரேபிய கவிஞர்கள் மூலம் தன்னம்பிக்கை கவிதைகளை எழுதச் செய்தனர். கணவர், குழந்தைகளை இழந்த பெண்களும் வீரர்களுடன் போரில் பங்கேற்க வந்தனர். இந்த விஷயம் மெக்காவில் இருந்த நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸிற்கு தெரிய வந்தது. உடனே துாதுவர் மூலம் நாயகத்திற்கு செய்தி அனுப்பினார்.