ADDED : பிப் 19, 2024 01:37 PM
வட்டி எவ்வளவு தான் வருமானத்தைப் பெருக்கினாலும் அதன் முடிவு குறைந்து போகக்கூடியதாகும். இறைவனுக்குப் பயந்து உண்மை பேசி வியாபாரம் செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் மறுமைநாளில் பாவிகளாக எழுப்பப்படுவர். வட்டி வாங்கி அதை உண்ணச் செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், சாட்சியாளன் என அனைவரும் பாவத்தை செய்கிறார்கள். எந்த ஊரில் வட்டியும், விபச்சாரமும் பெருகி இருக்குமோ அந்த ஊர் பாழடைந்து போகும். எனவே இந்த பாவத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்.