ADDED : பிப் 02, 2024 02:27 PM
மறுமையில் நம்பிக்கை வைத்து நற்செயல்களில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதால் நரகம் செல்வீர்கள் என நபிகள் நாயகம் எச்சரித்துள்ளார்.
'நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்' என்று அவர் அஷ் ஷுஅரா அத்தியாயத்தின் வசனம் இறங்கிய போது குரைஷிகளிடம் சொன்னார். மேலும் அவர், 'உங்களை நரகத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள நீங்களே கவனம் செலுத்துங்கள். இறைவனின் வேதனை உங்கள் மீது வருவதை என்னால் தடுக்க முடியாது. அப்து முனாபின் குடும்பத்தாரே உங்களுக்கும்தான். அப்பாஸ்பின் அப்துல் முத்தலீபே நான் சொல்வதைக் கேளுங்கள். என் மாமியான ஸபிய்யாவே உங்களுக்கும்தான். என் மகளான பாத்திமாவே. என்னுடைய பொருளில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கேள். கேட்பதை கொடுக்க சக்தி பெற்றுள்ளேன். ஆயினும் அவனது வேதனை உன் மீது வருவதை என்னால் தடுக்க முடியாது. எனவே நீங்களே உங்களை காத்துக் கொள்ள கவலைப்படுங்கள். நம்பிக்கை, நற்செயல்கள் மட்டுமே மறுமையில் பயன்தரும்.