ADDED : ஜன 19, 2024 02:00 PM

ஆதிமனிதரான ஹஜ்ரத் ஆதமின் (அலை) உடலுக்குள் ஆத்மா புகுத்தப்பட்டது. அந்த ஆத்மா அமைதி இல்லாமல் 'எப்போது இந்த உடலில் இருந்து வெளியேறலாம்' என துடித்தது. இறைவன் அதனைச் சமாதானப்படுத்தி, வானவர்களிடையே அதனைக் கண்ணியப்படுத்தி சுவர்க்கத்துப் பூங்காக்களில் உலவ விட்டு மகிழ்ச்சியடையச் செய்தான். ஹஜ்ரத் ஆதம் படைக்கப்போவதைப் பற்றி அவன் தன் எண்ணத்தை பின்வருமாறு வெளியிட்டான். உமதிறைவன் மலக்குகளை நோக்கி, 'நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக அமைக்கப்போகிறேன்' என்றான்.