அறிஞர்களான இயாழ், அப்துல்லாஹ் முபாரக் இருவரும் நண்பர்கள். எல்லைப் பாதுகாப்புக்காக முபாரக் போருக்குச் செல்ல நேர்ந்தது. அந்த நேரத்தில் தொழுகையில் ஈடுபட்ட இயாழ் தன் நண்பர் போரில் ஈடுபடுவதை எண்ணி வருந்தினார்.
இருவரும் சேர்ந்து தொழுகை செய்த நாட்கள் நினைவுக்கு வந்தது. 'நண்பரே... உடனே புறப்பட்டு வாருங்கள். திருமறை ஓதலாம். போரிடுதல் என்பது உடல் வலிமை மிக்கவர்கள் செய்யும் செயல். நீர் அறிஞர் என்பதால் போரில் ஈடுபட வேண்டாம்' என கடிதம் எழுதினார்.
இதைக் கண்ட முபாரக், 'தோழரே... சிலருக்கு நோன்பு நோற்பதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும் இறைவன் அருள்புரிகிறான். அதைப்போல் சிலருக்கு இறைவழியில் போராடுவதற்கு வாய்ப்பு அளிக்கிறான். ஆகையால் நாம் இருவரும் நல்ல செயலில் தான் ஈடுபட்டுள்ளோம்' என பதில் கடிதம் அனுப்பினார்.