இறைவன் அழகை விரும்புகிறான். மனிதன் மிடுக்கான தோற்றத்துடன் இருக்க தன்னை அலங்கரிப்பதை வணக்கத்துடன் ஒப்பிடுகிறது இஸ்லாம். அதாவது தனிப்பட்ட வாழ்விலும் சரி, சமூக வாழ்விலும் சரி இறை நம்பிக்கையாளர்கள் தங்களின் தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒருமுறை தலைமுடி அலங்கோலமான கோலத்துடன் நபிகள் நாயகத்தை சந்திக்க வந்தார் ஒருவர். அவரிடம் ''உங்கள் தலைமுடியை அழகுபடுத்தி வாருங்கள்'' என அனுப்பி வைத்தார். பின் தோழர்களிடம், ''நல்ல தோற்றத்தில் வருவது இறைவனின் வழி. அலங்கோலமாக வருவது மோசமான சாத்தானின் வழி'' எனத் தெரிவித்தார்.