ADDED : அக் 04, 2024 09:13 AM
சூபி ஞானியை சந்தித்தார் செல்வந்தரான அராபத். அவரிடம், ''நான் எல்லோருக்கும் உதவி செய்கிறேன். என்னால் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பல மசூதிகளை கட்டியுள்ளேன்'' என பெருமிதமாகச் சொன்னார்.
அதற்கு அவர், 'நல்லது' என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.
பின் மீண்டும், ''ஞானியே! எனக்கு சுவனம் உறுதிதானே'' எனக் கேட்டார்.
''கஷ்டம்தான்'' என்றார்.
''ஏன்'' என கோபமாக கேட்டார் அராபத்.
''நீங்கள் தர்மம் செய்கிறீர்கள். ஆனால் 'நான்' என்ற ஆணவத்தை விடவில்லையே'' என்றார். அராபத் உண்மையை உணர்ந்தார்.