ADDED : செப் 06, 2024 07:09 AM
இம்மை, மறுமை குறித்து கீழ்க்கண்ட விஷயங்களை அறிஞர் கூறுகிறார்:'மக்களே! நற்செயல்களை விரைந்து செய்யுங்கள்.
ஆசைகளை வளர்க்காதீர்கள். மரணத்தை மறக்காதீர்கள். இம்மையின் இன்பத்தை நம்பாதீர்கள். அதன் கவர்ச்சிப் பார்வையும் மோகனச் சிரிப்பும் உங்களை மயக்கி விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இம்மையைப் பார்த்து பலரும் ஆசைப்படுகிறார்கள். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களும் இப்படித்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களின் பெயர் இந்தப் பரந்த மண்ணகத்தில் எந்த மூலையிலும் ஒலிக்கவில்லை.
இப்படி இம்மைக்கு பாடுபட்ட அவர்களால் எந்த நலனையும் பெறமுடியவில்லை. எனவே மறுமைக்கான விஷயத்தில் ஈடுபடுங்கள்.