ஆதிமனிதரான ஹஜ்ரத் ஆதம் நோயால் அவதிப்பட்டார். அப்போது ஹஜ்ரத் ஷீத்திடம் ''மகனே! சுவர்க்கத்தில் கிடைக்கும் ஜைத்துான் எண்ணெய்யைப் பருக வேண்டும் என ஆசைப்படுகிறேன். துார் ஸீனாய் மலைக்குச் சென்று கேட்டால் இறைவன் கொடுப்பான்'' என்றார்.
அதன்படி கொண்டு வர அதில் சிறிது பருகினார். மீதத்தை உடலில் தேய்க்க நோய் குணமானது. சிறிது காலம் நலமாக இருந்த ஆதம் பின் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். மீண்டும் எண்ணெய் வாங்கி வரச் சொன்னார். அதைச் வாங்க சென்ற போது, வானவரான ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) எதிரில் வந்தார். ''அங்கு செல்ல வேண்டாம். ஆதமை அழைத்து வருமாறு இறைவன் கட்டளையிட்டுள்ளான்'' என்றார். இதையறிந்த ஆதமின் மனைவி ஹவ்வா அழுதாள்.
''இறைத்துாதர்களிடம் என்னை ஒப்படைக்கப் போகிறேன்'' என மனைவியிடம் தெரிவித்தார் ஆதம். அப்போது வானில் இருந்து ஒரு குரல், ''ஆதமே! அண்ணாந்து வானத்தை பார்'' என்றது. சுவர்க்கத்தின் கதவு பேரொளியுடன் திறந்தது. ஆதமின் உடலை விட்டு உயிர் பிரிந்தது.