நபிகள் நாயகம் தோழர்களுடன் பயணம் மேற்கொண்டார். பகல் முழுவதும் நடந்ததால் களைப்பாக இருந்தது. தண்ணீர் நிறைந்த ஓரிடத்தில் குடில் அமைத்து தங்கினர். இரவு உணவுக்காக சமைக்க முற்பட்டனர். ஆளுக்கொரு வேலையாக பகிர்ந்து செய்யத் தொடங்கினர். ஆனால் நாயகத்திடம், ''சமைக்கும் வரை ஓய்வு எடுங்கள்'' என்றனர்.
''நீங்கள் மட்டும் வேலை செய்வதை நான் விரும்பவில்லை. நமக்குள் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கிடையாது. தோழர்களை விட தன்னை உயர்வாக கருதுபவனை இறைவன் நேசிக்க மாட்டான். நான் வேலை செய்வதே முறை'' என விறகு சேகரிக்க புறப்பட்டார்.