ஆதிமனிதர்களான ஹஜ்ரத் ஆதம், ஹஜ்ரத் ஹவ்வா தம்பதியர் தடை செய்யப்பட்ட செயலை செய்ததால் தண்டனைக்கு ஆளாயினர். அதன்படியே ஆதம் இலங்கையிலும், அவரது மனைவி ஹவ்வா, மெக்காவிலும் வானவரான ஹஜ்ரத் ஜிப்ரீலால் (அலை) இறக்கி விடப்பட்டனர்.
வானத்தை தொடும் அளவிற்கு உயரமாக இருந்த ஆதம், உயரம் குறைந்தவராக மாறினார். இதனால் வானவர்கள் ஓதும் 'தஸ்பீஹ்'(இறை வசனம்) காதிற்கு கேட்கவில்லை.
சூரியன் மறையும் நேரத்தில் அவர் பூமியில் இறங்கினார். இரவையே பார்க்காத அவர் இருளைக் கண்டு பயந்தார். மனைவி ஹவ்வா தன்னுடன் இல்லாததை எண்ணி அழ ஆரம்பித்தார். அதிகாலையில் அவர் முன் தோன்றிய வானவர் ஜிப்ரீல், ''இரவின் இருளை விட்டு அகற்றுவதற்காக ஒரு 'ரக்அத்' தையும், ஒளியைப் பரப்புவதற்காக ஒரு 'ரக்அத்' தையும் தொழுகை செய்' என அறிவுறுத்தினார். அதன்படி தொழுத போது, நவரத்தின மாளிகையை அவர் வசிக்க கொடுத்தான் இறைவன்.