ADDED : மே 24, 2024 09:07 AM
அதிகாரியான பறவை மயிலிடம் சுவர்க்கத்திற்குள் நுழைய ஆலோசனை கேட்டார் இப்லீஸ். மேலும் சுவர்க்கத்தில் வசிக்கும் ஹஜ்ரத் ஆதம், குறிப்பிட்ட மரத்தின் அருகில் செல்லக் கூடாது என்ற நிபந்தனையையும் இப்லீஸ் அறிந்தான்.
அதற்கு மயில், ''உன்னை சுவர்க்கத்துக்குள் என்னால் கொண்டு செல்ல முடியாது. என் நண்பன் பாம்பிடம் தெரிவிக்கிறேன். அது ஏதாவது தந்திரம் மூலம் நுழையச் செய்யும்'' என்றது.
பாம்பு சுவர்க்கத்தில் இருந்து வருவதைக் கண்ட இப்லீஸ் தன் விருப்பத்தை தெரிவித்தான்.
ஆனால் பாம்பும் முடியாது என கை விரித்தது. கடைசியில் ஒரு யோசனை தோன்றியது. அதன்படி பாம்பின் வாயிற்குள் நுழைந்து பதுங்கியபடி நுழைந்தான்.
இந்த செய்தியை அறிந்த வானவர்கள் அவனை விரட்ட ஆரம்பித்தனர். அதற்குள் இறைவனிடம் இருந்து, 'இப்லீஸை விட்டுவிடுங்கள்' என்ற உத்தரவு வந்தது. அவனுக்கு உதவிய பாம்பு தண்டனையாக கால்களை இழந்ததோடு அதன் பல்லில் விஷமும் வைக்கப்பட்டது.