ADDED : மார் 31, 2024 09:16 AM

ஒருமுறை முஸ்லிம்களுக்கு எதிராக போர் செய்த எழுபது நபர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மெதீனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தோழரான அபூபக்கர், ''கைதிகளிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு விடுவிக்கலாம்'' என்றார். ஆனால் உமர், ''கைதிகளை கொன்று விடுவோம்'' என்றார்.
அதற்கு நபிகள் நாயகம், '' ஒவ்வொரு கைதியிடம் இருந்து நான்காயிரம் நாணயங்கள் வாங்குங்கள். அல்லது அவர்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பத்துக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தந்தால் விடுவிக்கலாம்'' என உத்தரவிட்டார். அதன்படி சிலர் கல்வி கற்றுக் கொடுத்து விடுதலை பெற்றனர்.