Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/நெருப்பு மனிதன்

நெருப்பு மனிதன்

நெருப்பு மனிதன்

நெருப்பு மனிதன்

ADDED : மார் 31, 2024 09:15 AM


Google News
'ஹஜ்ரத் ஆதமை (அலை) ஏன் ஸஜ்தா(வணக்கம்) செய்யவில்லை' என இப்லீஸிடம் கேட்டான் இறைவன்.

அதற்கு அவன் கர்வத்துடன், 'என்னை நெருப்பில் இருந்து படைத்தாய். அவரை நீ வெறும் மண்ணில் இருந்துதானே படைத்தாய். நெருப்பில் ஒளியும், மண்ணில் இருளும் இருக்கிறதல்லவா? எனவே அந்தஸ்தில் நெருப்பு தானே உயர்ந்தது' என்றான்.

இந்த பதிலால் அவனது முகத்தில் இருந்த ஒளியும், அந்தஸ்தும் நீக்கப்பட்டது. அவனைச் சிறுமைப்படுத்தும் விதத்ததில் சுவனத்தில் இருந்து பூமியில் வீசியெறிய முடிவு செய்யப்பட்டது. இது நடப்பதற்கு முன்னர் எல்லா வானவர்களையும் விட இப்லீஸ் அழகாக இருந்தான். ஒவ்வொரு வானத்திலும் அவனுக்கு தனிக் கவுரவம் அளிக்கப்பட்டிருந்தது.

இறைவனின் உத்தரவிற்கு எதிராக நடந்ததால் ஹஜ்ரத் ஜிப்ரீல், ஹஜ்ரத் மீகாயில், ஹஜ்ரத் இஸ்ராபீல், ஹஜ்ரத் இஜ்ராயீல் ஆகியோர் அவனுக்கு சாபமிட்டனர். பிறகு ஒவ்வொரு வானத்தில் இருந்தும் வானவர்களும் சாபமிட்டனர்.

இதனால் இப்லீஸ் கடலில் 100 வருடங்கள் வரை மூழ்கடிக்கப்பட்டுக் கிடந்தான். பின் வெளியேற்றப்படும் போது அவனது முகம் கறுத்தும், கண்கள் நீல நிறமுமாக மாறி விகாரமாக இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us