ADDED : பிப் 05, 2025 01:43 PM

தொழுகையின் போது ஒருவர் நம்மிடம் உதவி கேட்டால் தொழுகையை விட்டு வரலாமா என்ற சந்தேகம் வரலாம். அவர்களுக்காக ஒரு சம்பவம்.
இமாம் ஹூசைனிடம் துன்பத்தில் வாடிய ஒருவர் தன் நிலையை சொல்லி உதவி கேட்டார். அப்போது, ''நான் தொழுகையில் இருக்கிறேன்; இப்போது வெளியே வர முடியாது'' என்றார். பின் அருகே இமாமின் சகோதரர் ஹசனிடம் உதவி கேட்டார். பள்ளிவாசலை விட்டு வெளியே வந்த ஹசன் தேவையான உதவியைச் செய்தார்.
''தங்களின் சகோதரரிடம் உதவி கேட்டேன். அவர் தொழுகையில் இருந்து வெளியே வர மறுத்தார். ஆனால் தாங்கள் உதவி செய்ததற்கு நன்றி'' எனச் சொன்ன போது ஹசன்,
''பிறருக்கு உதவி செய்வதற்காக தொழுகையை விட்டு வெளியே வருவோருக்கு ஹஜ்ஜூம், உம்ராவும் செய்த நன்மை கிடைக்கும்.
உதவ முடியாவிட்டாலும் அதற்காக முயற்சி செய்தால் கூட உம்ரா செய்த நன்மை கிடைக்கும்'' என்றார்.