ஒருமுறை வெள்ளம் வந்தபோது மனிதர்கள், விலங்குகள் கப்பலில் பயணித்தனர். அவர்களின் கழிவுகளால் கப்பல் அசுத்தம் ஆனது. இதை போக்க நபி ஹஜ்ரத் நுாஹ் முறையிட்ட போது, 'யானையின் நெற்றியை தடவு' என இறை ஆணை வந்தது. அப்படியே அவர் செய்ய இரு பன்றிகள் தோன்றின. அது கப்பலை சுத்தம் செய்தன.
அதன்பின் எலிகள் இனப்பெருக்கம் செய்ததால் அதன் எண்ணிக்கை பெருகியது. இறை ஆணைப்படி சிங்கத்தின் இரு புருவங்களுக்கு இடையே நுாஹ் தடவினார். ஒரு ஜோடி பூனை வெளிப்பட்டு கப்பலில் இருந்த அத்தனை எலிகளையும் துவம்சம் செய்தன. இப்படியே இரண்டு மாதமாக கப்பல் பயணம் தொடர்ந்தது. இதற்கிடையே இறை நிராகரிப்பாளர்களான காபிர்கள் வெள்ளத்தில் மூழ்கினர். எல்லாம் இறைவன் ஆணைப்படியே நடக்கிறது என்பதை உணர்ந்தார். மழை நின்றது.
சில நாளில் வெள்ளமும் வடிந்தது. 'ஜூதி' மலைக்கு அருகில் போய் கப்பல் நின்றது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை அறிய காகத்தை அனுப்பி வைத்தார் நுாஹ். அழுகிக் கிடந்த பிணங்களை (காபிர்களின் உடல்கள்) கண்ட காகம் சாப்பிடத் தொடங்கியது. தனக்கு தரப்பட்ட பணியை மறந்ததால் காகத்தின் மீது கோபம் கொண்ட நுாஹ் அதற்கு சாபம் கொடுத்தார்.
பின்னர் புறாவை அனுப்பினார். அது உற்சாகத்துடன் சென்று வந்து செய்தியை சொன்னது. மகிழ்ச்சியுடன் அவர் அதற்காக துஆ (பிரார்த்தனை) செய்தார்.