Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/கப்பல் தயார்

கப்பல் தயார்

கப்பல் தயார்

கப்பல் தயார்

ADDED : ஜன 01, 2025 01:25 PM


Google News
மக்கள் நேர்வழியில் நடத்த உபதேசம் செய்தார் ஹஜ்ரத் நுாஹ் நபி. ஆனால் அவர்களோ நுாஹை துன்புறுத்தினர். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அவர், தன் கையை வான் நோக்கி கீழ்க்கண்ட பிரார்த்தனையை சொல்ல ஆரம்பித்தார்.

'இந்த மக்கள் என்ன பாடுபடுத்துகிறார்கள் பார்த்தாயா... எவ்வளவு உபதேசம் செய்தாலும் திருந்தவில்லை. இவர்கள் நேர்வழிக்கு திரும்ப அருள்வாயாக. இல்லையென்றால் துன்பத்தை சகித்துக் கொள்ளும் மனதை எனக்கு தருவாயாக' என்றார்.

'இந்தக் கூட்டத்தாரில் யார் உம்மீது விசுவாசம் கொள்ள வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டதோ அது நடந்துவிட்டது' என பதில் கிடைத்தது.

'மீதம் இருப்பவர்களுடைய யாரேனும் இனி உம் மீது விசுவாசம் கொள்வார்களா...' என கேட்டதற்கு, 'இல்லை' என்றான்.

'அப்படியானால். அவர்களை அழித்து விடுவாயாக' என்றார் நுாஹ். 'பிரளயத்தின் மூலம் அழிக்கிறேன். உம்மைப் பின்தொடர்பவர்கள் பாதுகாப்புடன் வாழ கப்பல் ஒன்றை கட்டுங்கள்' என்றான்.

'கப்பல் என்றால் எப்படி செய்வது எனத் தெரியாதே'

'அது மரத்தால் செய்யப்படும் வீடு. இந்த வீடு தண்ணீரில் மிதக்கும்' எனக் கூறி வானவரான ஜிப்ரீல் மூலம் மரக்கன்றுகளை அனுப்பி வைத்தான். நுாஹ் அவற்றை வளர்த்து மரமாக்கி அதன் மூலம் பலகைளை தயாரித்து கப்பல் கட்ட ஆரம்பித்தார்.

ஒவ்வொரு பலகையின் மீதும் ஒவ்வொரு நபியின் பெயரை பொறித்தார். அடுத்த நாள் வந்து பார்க்கும்போது பெயர் அழிந்திருந்தது. மீண்டும் எழுத அதைத் தொடர்ந்து அழிந்தது. அவர் குழம்பிய போது இறை அறிவிப்பு (வஹீ) வந்தது.

'முதல் பலகையில் என் பெயரையும், கடைசிப் பலகையில் இறுதி நபியான முஹம்மதின் பெயரையும் எழுது. ைஷத்தானின் சேஷ்டையில் இருந்து பாதுகாப்பு பெறுவீர்கள்' என்று இருந்தது. அதன்படி செய்யவே கப்பல் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us