Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/சிறந்த செயல்

சிறந்த செயல்

சிறந்த செயல்

சிறந்த செயல்

ADDED : மே 02, 2023 02:16 PM


Google News
* பிறருக்கு உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவது சிறந்த செயல்.

* உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் உடல் நன்றாக இருக்கும். அதுதான் இதயம்.

* இறைவன் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை உள்ளவர் நல்லதை மட்டுமே பேசுவர்.

* மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர், விருந்தினரைக் கண்ணியமாக நடத்தட்டும்.

* ஒரு நன்மை செய்பவருக்கு அதே போன்று பத்து மடங்கு நன்மைகள் கிடைக்கும்.

* நல்ல விஷயங்களை அறிவுடையவர்களே ஏற்பர்.

* உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றுள்ளன. பொய்யர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை நினைத்து பாருங்கள்.

* குழப்பம் விளைவிப்பது என்பது கொலையை விட கொடியது.

* எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகின்றான் என்பதை அறிவதில்லை.

* நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை தேடி வரும்.

-பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us