Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/ஆன்மிகமே அஸ்திவாரம்

ஆன்மிகமே அஸ்திவாரம்

ஆன்மிகமே அஸ்திவாரம்

ஆன்மிகமே அஸ்திவாரம்

ADDED : ஜூன் 10, 2013 11:06 AM


Google News
Latest Tamil News
* நீங்கள் ஒவ்வொருவரும் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

* உண்மை, நேர்மை, அன்பு இந்த மூன்றும் ஒருவரிடம் இருக்குமானால் அவரைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உலகில் யாருக்கும் கிடையாது.

* கடினமான சொல் எதையும் சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு இதயங்களைத் திறந்து வையுங்கள்.

* ஆன்மிகத்தைப் புறக்கணித்துவிட்டு, மேலைநாட்டு நாகரிகத்தின் பின்னால் சென்றால், நம் சமூகமே அழிந்து போகும். இது நூறு சத உண்மை.

* ஆன்மிகம் என்னும் அஸ்திவாரத்தின் மீது தான் நம் நாடு என்னும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. ஆன்மிகமே நமது பண்புகளை மேல்நோக்கி கொண்டு செல்கிறது.

* கர்வம் தலை தூக்கி நின்றால் நம்மால் எந்தச் செயலையும் சாதிக்க முடியாது. முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள்.

* கடவுள் எல்லா உயிரிலும் குடிகொண்டிருக்கிறார்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us