Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பாதுகாக்கப்பட்ட மனம்

பாதுகாக்கப்பட்ட மனம்

பாதுகாக்கப்பட்ட மனம்

பாதுகாக்கப்பட்ட மனம்

ADDED : செப் 20, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
* உலக நன்மைக்காக உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள். சுயநலமில்லாத வாழ்வே உயர்ந்தது.

* மனத்தூய்மை இருந்தால் மட்டுமே கடவுளை அடைய முடியும். மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

* அரிய பெரிய விஷயம் எல்லாம் பலத்த தடைகளைச் சந்தித்த பிறகே கைகூடுகின்றன. அதனால், முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

* கோழைகளே வாழ்வில் பாவம் செய்கின்றனர். தைரியம் கொண்டவர்கள் ஒருக்காலும் பாவம் செய்ய மாட்டார்கள்.

* இதயம் விரிவடையும் இடத்தில் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானத்தை அடைவதே பிறவிப்பயன்.

* அடக்கப்படாத மனம் மனிதனை கீழ்நோக்கி இழுத்து சென்று விடும். அடக்கப்பட்ட மனமோ அவனுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us