Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/தவறுகளையும் வாழ்த்துங்கள்!

தவறுகளையும் வாழ்த்துங்கள்!

தவறுகளையும் வாழ்த்துங்கள்!

தவறுகளையும் வாழ்த்துங்கள்!

ADDED : செப் 11, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
* மனதில் தூய்மையான எண்ணங்களை மட்டும் அனுமதியுங்கள். நல்ல செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். தீய விஷயங்கள் தலைகாட்டாதபடி இருப்பதற்கு இது ஒன்றே வழி.

* பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால், வட்டியும் முதலுமாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடும்.

* நல்லவனாக இருங்கள். பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். ஆன்மிக வாழ்வில் உயர்வதற்கான வழி இது மட்டுமே.

* பண்டைக்காலத்தில் வாழ்விற்குரிய விதியாக தியாகம் கருதப்பட்டது. இனி வரப்போகும் பலகோடி நூற்றாண்டு காலத்திற்கும் இந்த விதி பொருந்தும்.

* செய்த தவறுகளை வாழ்த்துங்கள். அவை, <உங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கின்றன.

* எது நல்லதென்று மனதிற்குப் படுகிறதோ அதை மட்டுமே செயல்படுத்துங்கள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us