Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வினோபாஜி/நியாயத்திற்கு கட்டுப்படுங்கள்

நியாயத்திற்கு கட்டுப்படுங்கள்

நியாயத்திற்கு கட்டுப்படுங்கள்

நியாயத்திற்கு கட்டுப்படுங்கள்

ADDED : நவ 16, 2010 05:11 AM


Google News
Latest Tamil News
 * பற்றற்றவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ளப்பற்றுகளை எல்லாம் துறந்துவிடுவதற்கு அப்பற்றைப்பற்ற வேண்டும்.

* கடவுளை நிச்சயமாகக் காணமுடியும்.

அதற்குத் தேவை நம்பிக்கை. பணத்தை

மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. உழைப்பிற்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.

* மக்கள் அனைவருமே நாராயணர்களே என்பதை

அனுபவம் மூலம் உணர்ந்து கொள்வது தான் ஆன்மிகம்.

* உலகம் முழுவதும் அச்சம் மண்டியிருப்பதற்குக்

காரணம் அனைவரின் உள்ளங்களிலும் பயம்

புகுந்துள்ளது.

* மக்களுக்கு நியாயத்தை உணர்த்துதல், அவர்களை

நியாயத்திற்கு கட்டுப்படச் செய்தல் சத்தியாகிரகத்தின் ஓர் அங்கமாகும்.

* பகவத்கீதை மற்றும் பாகவதத்தில் கூறியபடி,

பக்தர்களான சாது- மகாத்மாக்கள் அனுஷ்டித்துக்

காட்டிய பக்தி தருமமே பக்தி மார்க்கம்.

-வினோபாஜி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us