Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/பொறுமையாக பணி செய்யுங்கள்

பொறுமையாக பணி செய்யுங்கள்

பொறுமையாக பணி செய்யுங்கள்

பொறுமையாக பணி செய்யுங்கள்

ADDED : ஆக 14, 2008 08:08 AM


Google News
Latest Tamil News
<P>இறைவனுக்குச் செய்யும் இடைவிடாத நிவேதனமாக உங்களுடைய அன்றாடப்பணிகளைச் செய்து கொண்டிருந்தால் தியானம் என்பதையே செய்ய வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் பணிகளைப் பெருஞ்சுமையாகக் கருதாதீர்கள். அதை எந்த அளவிற்கு பொறுமையாக செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு அச்செயலால் நன்மை உண்டாகும். வேலையில் களைப்பு என்பதே தோன்றாது. மேலும் வலிமையைத் தருவதாக அமையும். மற்றவர்களிடம் நல்லவர்கள் போல் நடிப்பது கூடாது. நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நல்லவர்களாக இருக்கக் கூடாது. மற்றவர்களை நேசிப்பதால் நல்லவனாக இருப்பவன் மட்டுமே உண்மையில் நல்லவனாவான். துணிவு மிக்கவன் எத்தனை தோல்விகள் ஏற்பட்ட போதிலும் இறுதி வெற்றிக்காகத் தொடர்ந்து போராடி வெற்றிக்கனியை எட்டிப் பறிப்பான். லட்சியம் உள்ளவன், வாழ்க்கையில் தான் செய்யப் போவதைப் பற்றித் தம்பட்டம் அடிக்க மாட்டான். தான் செய்து முடித்ததைப் பற்றிப் பெருமை பேசவும் மாட்டான். எவன் ஒருவன் பிறரிடம் சச்சரவில் ஈடுபடுகிறானோ அவன் இறைப்பணிக்கு எதிராக போர் தொடங்குகிறான். இறைநாட்டம் &lt;உடையவன் இருக்கும் இடத்தில் அமைதி மட்டுமே இருக்கும்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us