Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/மிகவும் கவனமாக இருங்கள்

மிகவும் கவனமாக இருங்கள்

மிகவும் கவனமாக இருங்கள்

மிகவும் கவனமாக இருங்கள்

ADDED : ஆக 10, 2008 04:35 PM


Google News
Latest Tamil News
<P>* மனிதர்கள் அனைவருக்கும் கவனத் தன்மையும், ஒருமுகப்படுத்தும் திறனும் இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களே எடுத்த செயலில் வெற்றி காண்கின்றனர். ஒருவர் தலைசிறந்த விஞ்ஞானியாகவோ, மேதையாகவோ இருக்கிறார் எனில் அது அவரது ஒருமுகப்படுத்திய தன்மையாலேயே சாத்தியமாகிறது. ஆகவே, மனதை ஒருநிலைப்படுத்துவது அவசியம். <BR>* வாழ்க்கையில் வெற்றிகாண வேண்டுமென செயல்படுபவர்கள், முதலில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்கென பெரியளவில் செயல்படத் தேவையில்லை. சிதறிக்கிடக்கும் உணர்வுகளை ஒரே முனையில் கொண்டு சேர்த்தாலே போதும். கவனம், உணர்வு நிலை இவ்விரண்டையும் ஒன்றாக்கி செயல்படும்போது, வேறெந்த சக்தியாலும் வெல்ல முடியாத அளவிற்கு அது பலன் பெற்று விடுகிறது.<BR>* பலவீனமானவர்கள் கூட, சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம், எளிதில் பலசாலிகளாக மாறிவிடலாம். ஒரு குறிப்பிட்ட யோசனை உங்கள் மனதில் தோன்றும் போது, உடனே அதை செயல்படுத்திவிட வேண்டும். மாறாக அதன் மீது கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டால் அதைவிட வேறு அறிவற்ற செயல் இருக்க முடியாது. அத்தகைய அறிவை பெறுவதற்கு கவனத்தை ஒருமுகப் படுத்தும் திறன் அவசியம்.</P>

<P>* மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்யுங்கள். தியானம் மூலம் அமைதி உண்டாகும். அமைதி இருக்குமிடத்தில் மனமும் ஒருமுகப்படும். அந்த நிலையில் செய்யும் செயல்கள் எளிதில் வெற்றி கண்டுவிடும்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us