ADDED : ஜன 28, 2010 03:49 PM

* ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும் என்பது உண்மையே. ஆனால், நேர்மையாகச் செய்யப்படும் சேவையின் மூலம் இதைப் போல பத்து மடங்கு முன்னேற முடியும்.
* நம்முடைய எண்ணங்கள் இறைவனை நோக்கித் திரும்பும்போது உலகம் யாவும் மாட்சி மிக்கதாகவும், எளிமையாகவும், அமைதியாகவும் ஆகி விடும்.
* இறைவனின் கருணைக் கரங்களால் மட்டுமே ஞானத்தை மறைக்கும் மாயத்திரைகள் யாவற்றையும் விலக்க முடியும். அவரால் மட்டுமே நமக்குப் பரிபூரணமான பாதுகாப்பை அளிக்க முடியும்.
* மிகவும் பொறுமையாகவும், அமைதியாகவும் இருங்கள். ஒரு போதும் கோபப்படாதீர்கள். பிறர் மீது ஆட்சி செலுத்த வேண்டுமானால், உங்கள் மீது ஆட்சி பெற்றிருக்க வேண்டும்.
* ஆசிரியர் என்பவர் வெறுமனே பாடத்தைப் போதிப்பவராக மட்டும் இருக்கக் கூடாது. உதவி செய்பவராகவும், வாழ்க்கையில் நல்வழி காட்டுபவராகவும் இருக்கவேண்டும்.
* நாம் முன்னேறுவதற்காகவே பிறந்திருக்கிறோம். வாழ்வில் எவ்வளவோ கற்க வேண்டியுள்ளது. அதனால் கவன சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* சிறிய லட்சியங்களில் வெற்றி பெறுவதைவிட, மகத்தான பெரிய லட்சியத்திற்கு முயன்று தற்காலிகத் தோல்வி அடைவது மேல்.
-ஸ்ரீஅன்னை