ADDED : டிச 01, 2013 10:12 AM

* தான் மிகவும் சாதாரணமானவன் என்பதை உணர்ந்து விட்டால், மனிதன் மனப்பூர்வமாகக் கடவுளிடம் சரணாகதி அடைந்து விடுவான்.
* தன்னம்பிக்கை இல்லாதவருக்கு வாழ்க்கை அச்சமூட்டுவதாக இருக்கிறது. அரக்கத்தனமான அச்சத்தின் பிடியை அவ்வளவு
சுலபத்தில் உங்களால் விலக்க முடியாது. ஆனாலும், அதை விரட்டியே ஆக வேண்டும்.
* வாழ்வில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும். எது வந்தாலும் சலனமின்றிப் பொறுமையோடு எதிர்கொள்ளுங்கள்.
* அறிவு, செயல் இரண்டாலும் கடவுளுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த பிணைப்பால் உள்ளம் மகிழ்ச்சி பெறும்.
* வாழ்வில் மாற்றம் உண்டாக வேண்டுமானால், கால அவகாசம் தேவைப்படும். அதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருப்பது அவசியம்.
- ஸ்ரீஅன்னை