Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/ராமனின் வாழ்வே நமது லட்சியம்

ராமனின் வாழ்வே நமது லட்சியம்

ராமனின் வாழ்வே நமது லட்சியம்

ராமனின் வாழ்வே நமது லட்சியம்

ADDED : டிச 13, 2007 09:51 PM


Google News
Latest Tamil News
ராவணனை அழிப்பதற்காக புவியில் தோன்றிய ஹரியின் அவதாரமே ஸ்ரீராமனாகும். அழகும், நல்ல தோற்றமும், அரச அம்சங்களுடனும் அவர் பிறந்தார். அவரது புகழும், ஆற்றலும் அளப்பரியவை. பூமியில் அவருக்கு நிகர் எவருமில்லை. எந்தவித தீயகுணமும் அவரிடம் இல்லை. மிகவும் பண்பானவர். தம் பிரஜைகளின் ரட்சகர் அவர். தமது குடிமக்களை அவர் எப்பொழுதும் அன்புடனேயே அழைத்தார். அவர் ஒருபோதும் கடும் சொற்களைப் பயன்படுத்தியதே இல்லை.

ஸ்ரீராமரின் வாழ்க்கை உங்களது லட்சியமாக இருக்கட்டும். உங்கள் வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே லட்சியங்கள் நினைவு கூறப்படுகின்றன. ராமநவமி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது பகவான் ஸ்ரீராமரின் நற்குணங்கள் நம்மிடம் நிரம்பியிருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

கடவுளிடம் காணப்படும் உயர் பண்புகளை ஒருவன் வளர்த்துக் கொள்ளாத வரையில், ஒருவன் பகவான் ஸ்ரீராமரின் உண்மையான பக்தனாக இருக்க முடியாது. ஸ்ரீராமரை வழிபடுவதே இத்தகைய குணங்களை வளர்ப்பதற்கான சாதனமாகும்.

அன்புடனும் பணிவுடனும் ஸ்ரீராமரை வணங்குகிறவன், உள்ளத்தில் தூய்மையும், நல்ல சுபாவமும் சிந்தனை, சொல், செயலில் பற்றற்றும், பரந்த மனம் உடையவனாகவும் ஆகிறான். ஸ்ரீராமனின் உண்மையான பக்தன் அவரது ஆற்றல் மற்றும் அறிவின் பிரதிநிதியாகிறான்.

ஸ்ரீராமர் ஆண்மையும், நல்ல குணங்களும் வாய்க்கப் பெற்றவராக திகழ்ந்தார். மனம் மற்றும் புலன்களை அடக்கி ஆண்டவர் அவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us