Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/யோகாவை விட உயர்ந்தது

யோகாவை விட உயர்ந்தது

யோகாவை விட உயர்ந்தது

யோகாவை விட உயர்ந்தது

ADDED : ஏப் 15, 2008 01:08 AM

Google News
Latest Tamil News

ஒரு துறவி, யோகா படித்து சித்தி பெற்றார் . யோகக்கலையில் தானே சிறந்தவன் என கர்வம் கொண்டார். ஒரு மரத்தடியில் அவர் உட்கார்ந்திருந்த போது, மரக்கிளையில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சம் போட்டது. கோபத்தில் பார்வையாலேயே கொக்கை சாம்பலாக்கினார். இதனால் மேலும் கவுரவம் அதிகரித்தது. ஒருமுறை ஒரு வீட்டில் பிச்சை கேட்டார். அவ்வீட்டு பெண் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறினாள். 'தன் பெருமை அறியாமல் இவள் காக்க வைக்கிறாளே' என்று கோபமடைந்தார். அப்போது அவள், ''துறவியே! என்னைக் கொக்கென்று எண்ணுகிறீரா?' என்று கேட்டாள்.

துறவிக்கு ஆச்சரியம். 'கொக்கை எரித்தது உனக்கு எப்படி தெரியும்?' என அவளிடமே கேட்டார். 'கணவருக்கு பணிவிடை செய்வதன்றி வேறு அறியாத என் இதயம் பரிசுத்தமாய் இருப்பதால் பிறர் செயல்பற்றி என்னால் அறிய முடிந்தது' என்ற அப்பெண், 'இவ்வூரிலே வாழும் இறைச்சி வியாபாரியை சந்தித்தால் இதுபற்றி இன்னும் புரிந்து கொள்ளலாம்' என்றாள். துறவியும் வியாபாரியிடம் சென்று பிச்சை கேட்டார். 'சிறிது நேரம் காத்திருங்கள்' என்று சொல்லி விட்டு தன் முதிய பெற் றோருக்கு உணவளித்து விட்டு, துறவிக்கும் கொண்டு வந்தார் வியாபாரி.

இறைச்சி விற்று பாவத்தை சம்பாதித்தாலும், அவருக்கு பெற்றோர் மீதுள்ள பக்தியை அறிந்தார் துறவி. பதிபக்தியும், பெற்றோருக்கு சேவை செய்வதுமே யோகத்தை விட உயர்ந்தவை என்பதைப் புரிந்து கொண்டார். அவரது கர்வம் நீங்கியது.

-சிவானந்தர்

Our Apps Available On

Dinamalar

Follow us