Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/இறைவனின் மாவீரன் நீ!

இறைவனின் மாவீரன் நீ!

இறைவனின் மாவீரன் நீ!

இறைவனின் மாவீரன் நீ!

ADDED : மே 15, 2010 04:48 PM


Google News
Latest Tamil News
* உலகில் இருப்பதால் மட்டுமே பயனில்லை. நல்ல லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதற்காக வாழவேண்டும். நம்மால் முடிந்த நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாம் மனிதனாக பிறந்திருக்கிறோம்.

* பிறரை நாம் நேசிக்காமல், நம்மை மட்டும் பிறர் நேசிக்க வேண்டும் என்று கோருவது இயற்கைககு புறம்பானதாகும்.

* நீ எவரையாவது ஏளனம் செய்யும் போது உன் உள்ளத்தை உற்று நோக்கு. உன் மடமையைக் கண்டு சிரிக்கத் தோன்றும்.

* இறைவனின் மாவீரனாக உன்னை எண்ணிக் கொள். அப்போது தான் உன்னால் முழுமுயற்சியோடு உலகில் போராட முடியும்.

* பிறர் தீயதென்று சொல்வதை நீங்களும் தீயதென்று தள்ளாதீர்கள். கடவுள் எதை வேண்டாம் என்று தள்ளியிருக்கிறாரோ அதை நீங்கள் அகற்றுங்கள்.

* உன் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு செயலும் உனக்குள் இருக்கும் கடவுளுக்கு நீ அளிக்கும் காணிக்கையாகட்டும்.

* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்து விடக்கூடாது. அதை விலக்க முற்பட வேண்டும்.

* உத்தமச் செயல்களை செய்ய நினைப்பவர்கள், அதை உடனடியாகச் செய்து விட வேண்டும்.

-அரவிந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us