Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இனிய சொல் பேசுங்கள்

இனிய சொல் பேசுங்கள்

இனிய சொல் பேசுங்கள்

இனிய சொல் பேசுங்கள்

ADDED : பிப் 10, 2012 08:02 AM


Google News
Latest Tamil News
* நமக்குத் தேவையானவற்றை தருவதற்கு கடவுள் தயாராயிருக்கிறார். உங்களை முழுமையாகக் கடவுளிடம் ஒப்படைத்து, அவரருளை வேண்டுங்கள்.

* கல்லையும், மண்ணையும், காகிதத்துண்டையும் கடவுள் நிலைக்கு உயர்த்துங்கள். ஆனால், கடவுளைக் கல்லாகவும், காகிதத் துண்டாகவும் கீழான நிலைக்கு இறக்கிவிடாதீர்கள்.

* மனிதன் கடவுள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* வைரத்துக்குப் பதிலாக கரியை ஆண்டவனிடம் கேட்காதீர்கள். நிலையான இன்பத்தை அவரிடம் யாசிக்க வேண்டுமே தவிர, நிலையற்ற உலக இன்பத்துக்காக பிரார்த்திக்கக் கூடாது.

* குயிலுக்கு இனிய குரலும், காகத்துக்கு கொடிய குரலும் உள்ளது. நம்முடைய புனிதமான நாக்கை இனிய சொற்கள் பேசவே பயன்படுத்த வேண்டும்.

* கடவுளின் வங்கியில் செல்லக்கூடிய நாணயத்தை ஈட்டுங்கள். அது சிந்தனை, சொல், செயலால் அச்சிடப்பட்டு, பக்தி, சிரத்தை, நேர்மை என்ற முத்திரை பொறிக்கப்பட்டதாக இருக்கும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us