Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/வயது பற்றி நினைக்கவே வேண்டாம்!

வயது பற்றி நினைக்கவே வேண்டாம்!

வயது பற்றி நினைக்கவே வேண்டாம்!

வயது பற்றி நினைக்கவே வேண்டாம்!

ADDED : ஜூலை 31, 2008 08:14 AM


Google News
Latest Tamil News
<P>* பிறருக்கு உதவி செய்வது, எந்தச் செயலிலும் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு செய்தல், மனமகிழ்ச்சியுடன் இருத்தல் இவையே சொர்க்கமாகும். பொறாமையால் மனம் புழுங்குதல், வெறுப்பினால் பிறரை புறக்கணித்தல், பேராசை கொண்டு திரிதல் இவையே நரகமாகும். சொர்க்கமும், நரகமும் எங்கோ இருப்பதாக எண்ண வேண்டாம். அவையெல்லாம் நம் மனதில் இருக்கும் எண்ணங்கள் தாம். <BR>* உலகில் பேரும் புகழும் பெற வேண்டும் என்று போலி கவுரவத்திற்கு ஆசைப்பட்டு, உங்களுடைய நாணயத்தை இழக்காதீர்கள். நம்மை விடக் கஷ்டங்களை அனுபவிக்கும் ஏழைஎளியவர்களுக்கு அன்பினைக் காட்டுங்கள். <BR>* வயதாகி விட்டது என்ற உணர்வையும், அதனால் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற சோர்வையும் விட்டுத் தள்ளுங்கள். நடந்து முடிந்ததையே எண்ணிக்கொண்டு மனதில் சுமையைத் தூக்கிக் கொண்டு திரியாதீர்கள். இருப்பதைக் கொண்டு அதில் எப்படி நல்லவிதமாக உற்சாகமாக, நிறைவாக வாழமுடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள். எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஆர்வத்துடன் முயற்சித்துப் பாருங்கள். முடிந்தவரைக்கும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் கடமையைச் செய்யுங்கள். அதில் கிடைக்கும் வெற்றியே உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us