ADDED : ஜூலை 30, 2008 05:58 PM

<P>அன்றன்று சாப்பிடும் உணவை வயிறு செரித்து விடுவது அவசியமானதைப் போல, ஒவ்வொரு நாளும் கேட்கும் சிந்தனைகளை உள்வாங்கி அன்றே நடைமுறைப் படுத்துவதில் அக்கறை கொள்ள வேண்டும். இத்தகைய நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றினால் உடலும் உள்ளமும் மிக ஆரோக்கியமாக இருக் கும். <BR>ஒருவர் தன் வாழ்வில் வரும் கஷ்டநஷ்டங்களை மறந்து விட வேண்டும். அவற்றை விடாது பற்றிக் கொண்டிருந்தால், வாழ்க்கை பயனுள்ளதாக அமையாது. நம் மனத்தில் எழும் பதட்டம், பயம் ஆகியவை உடனுக்குடன் நீக்கப்பட வேண்டும்.கடவுளை அடைய வேண்டும் என்று அரைமனதுடன் இறங்குவது வெற்றி தராது. அது சேற்று நிலத்தில் செல்லும் நீரோடையில், தூய்மை பெற நீராடியது போலாகும். நீரின் பாய்ச்சல் மெதுவாக இருக்கும் போது சேறு அகலாது. முழுமையாக கடவுள் மீது மனம் ஈடுபட்டால் தான் அவரை அடைய முடியும்.சந்தனக் கட்டையை சமையலுக்கு எரிப்பதைப் போல நாம் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். இம்மனிதப்பிறவி சத்தியத்தை நாம் அறியக் கொடுக்கப்பட்ட வாய்ப்பாகும். ஆனால், நாம் அற்ப விஷயங்களில் மனதைச் செலுத்தி உடலையும், உள்ளத்தையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதைத் தவிர்க்க வேண்டும்.</P>