Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/அவன் இருக்க பயம் எதற்கு?

அவன் இருக்க பயம் எதற்கு?

அவன் இருக்க பயம் எதற்கு?

அவன் இருக்க பயம் எதற்கு?

ADDED : செப் 20, 2011 10:09 AM


Google News
Latest Tamil News
* இறைவனிடம் மனஅமைதி தந்தருளும்படி தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். படிப்படியாக அமைதி பெறுவதை உணர்வீர்கள்.

* தினமும் கடவுளை வணங்குபவனின் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் தெய்வீகம் வெளிப்படும். நாளடைவில் அவன் தெய்வத்திற்கு ஈடானவனாக மாறிவிடுவான்.

* கடவுள் அனைவருக்கும் சொந்தமானவராக இருந்தாலும், தீவிரமாக பிரார்த்தனை செய்பவர்கள் மட்டுமே அவருடைய தரிசனத்தைப் பெற முடியும்.

* வாழ்வில் துன்பம் நேரும் சமயத்தில் தனிமையான இடத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அப்போது மனச்சுமை நீங்கி சுதந்திரக் காற்று வீசுவதை உணரலாம்.

* கடவுளை சரணடைந்த பின் பொய் புரட்டுக்கு வேலையின்றி போய்விடும். தீயகுணங்கள் நீங்கிவிடும்.

* பிரார்த்தனை செய்பவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களால் சோர்வடைய மாட்டார்கள்.

* வாழ்வில் ஒரு முறையாவது பிரார்த்தனையில் ஈடுபட்டவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவன் மனதில் தைரியம் குடிகொண்டிருக்கும்.

- சாரதாதேவியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us