Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/ஏழை என்பவர் யார்?

ஏழை என்பவர் யார்?

ஏழை என்பவர் யார்?

ஏழை என்பவர் யார்?

ADDED : மே 29, 2010 04:05 PM


Google News
Latest Tamil News
* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஏழை என்பவன் யார்? என்று வினவினார்கள். ""எவரிடம் திர்ஹமோ(பணமோ) வேறு எந்தப் பொருளோ இல்லையோ அவரே எங்களில் ஏழை'' எனத் தோழர்கள் பதிலளித்தனர்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஒருவன் மறுமை நாளில் தன் தொழுகை, நோன்பு, ஜகாத்(தானதர்மம்) ஆகியவற்றுடன் இறைவனிடம் வருவான். இவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான். எவர் மீதாவது அவதூறு கூறியிருப்பான். எவரையேனும் கொலை செய்திருப்பான். எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே, அவனது நன்மைகள் அவனால் அநீதிக் குள்ளாக்கப்பட்டவர்களிடையே பங்கிடப்படும். அவனது நன்மை தீர்ந்து போய் அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால்,

அவர்களின் பாவங்கள் அவன் கணக்கில் எழுதப்படும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையான ஏழை ஆவார்'' (நூல்: முஸ்லிம்)

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us