Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/வேரிலே பழுத்த பலா

வேரிலே பழுத்த பலா

வேரிலே பழுத்த பலா

வேரிலே பழுத்த பலா

ADDED : ஆக 23, 2008 04:38 PM


Google News
Latest Tamil News
<P>சாஸ்திர நூல்கள் கடல் போல் விரிந்திருக்கின்றன. அவையனைத்தையும் நாம் கற்க முடியாது. நாம் கடலில் முத்தெடுப்பதுபோல, அவற்றின் சாரமான கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கரும்பைப் பிழிந்து சாற்றை அருந்துவதுபோல, அதன் சாரத்தை அறிந்து கொண்டாலே போதுமானதாகும். வெறும் சாஸ்திரப்படிப்பால் மட்டுமே ஒருவன் காலத்தைக் கழிக்க கூடாது. சாஸ்திரம் கூறும் வழிகளில் சாதனை செய்து பழக வேண்டும். வீடு கட்டுவதற்கான வரைபடம் கொண்டு கட்டினால் மட்டுமே குடியிருக்க முடியும். வெறும் வரைபடத்தைக் கொண்டு வாழ நினைத்தால் எப்படி வாழ முடியும்? கடவுளை அடையும் வழிகளிலே மிகவும் எளியவழி பக்திமார்க்கமே ஆகும். பக்தியால் மட்டுமே ஆரம்பத்திலிருந்தே பலன் பெறலாம். மற்ற வழிகளெல்லாம் இறுதியில் மட்டுமே இன்பத்தை தரும். அதனால், பக்தி வேரிலே பலாப்பழம் கிடைப்பது போன்றது. மற்ற வழிகளில், மேலே ஏறினால் மட்டுமே கனிகளைப் பெற்றுச் சுவைக்க முடியும். எச்செயலைத் தொடங்கினாலும், இறைசிந்தனையோடு இருங்கள். ''இறைவா! செயலைச் செய்யப் போகிறேன். அதை நிறைவேற்றும் ஆற்றலையும், திறமையையும் தந்தருள்வாயாக. உம் அருளினாலேயே நான் செயலில் ஈடுபடுகிறேன்'' என்று பிரார்த்திக்க வேண்டும். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us