Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/பொறுமையைத் தந்தருள்க!

பொறுமையைத் தந்தருள்க!

பொறுமையைத் தந்தருள்க!

பொறுமையைத் தந்தருள்க!

ADDED : அக் 03, 2008 10:18 AM


Google News
Latest Tamil News
<P>'இறைவனை பலகாலமாக வழிபட்டும் என் துயரங்கள் நீங்கவில்லை' என்று நம்மில் பலரும் வருந்துவதுண்டு. நம் மனம் ஆசைகளால் நிறைந்துள்ளது. நம் ஆசைகளை நிறைவேற்றும் பிரதிநிதியாகவே ஆண்டவனைப் பார்க்கிறோம். எனவே தான் இப்படி ஒரு எண்ணம் எழுகிறது. இறைவனை அன்புக்காகவே மட்டும் அணுகவேண்டும்.மனிதர்களாகப் பிறந்திருந்தும் நம் வாழ்வின் நோக்கத்தை அறியாது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெளித் தோற்றத்தில் மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக கீழ்நிலையில் இருக்கிறோம். மனிதர்கள் பகுத்தறிவு உடையவர்கள். இறைவனை அடைவதே தனது லட்சியம் என்பதை உணர வேண்டும். உலக விஷயங்களில் சிதறிக்கிடக்கும் மனதை தடுத்து நிறுத்தி, அதன் ஆற்றலை ஒருமுகப்படுத்தினால் இறைவனை உணரலாம் தினமும் கடவுளை வணங்கும்போது,''இறைவா! அனைவரும் உன் கருணைக்குப் பாத்திரமாகட்டும். எல்லாரும் நல்லவராகட்டும். நான் தீய செயல்கள் செய்யாதிருக்க அருள்புரிவீராக. பிறரது குற்றங்குறைகளை மன்னித்து, மறந்து விட வகை செய்க,'' என்று பிரார்த்தியுங்கள்</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us