Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/வெள்ளை அடிச்சு கொடுங்க!

வெள்ளை அடிச்சு கொடுங்க!

வெள்ளை அடிச்சு கொடுங்க!

வெள்ளை அடிச்சு கொடுங்க!

ADDED : ஜன 05, 2012 12:01 PM


Google News
Latest Tamil News
* பொங்கல் என்றால் அவரவர் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்துவதோடு, வசதி இல்லாதவர்களுக்கும் இந்த உதவியைச் செய்து கொடுக்க வேண்டும்.

* நல்ல மனமுள்ளவர்கள், ஒருவரைப் பூஜை செய்கிறார்கள் என்றால், அப்படிப் பூஜிக்கப்படுபவரும், ரொம்ப நல்ல மனம் படைத்தவராகத்தான் இருப்பார்.

* இறைவனுடைய புகழை நாம் பேசுவதாலும், கேட்பதாலும் புனிதர்களாக மாறுகிறோம். அவன் அருள் இல்லாமல் உலகம் இயங்காது.

* கஷ்டங்களை கண்ட இடங்களில் கூறாமல், கேட்பவர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ என்றில்லாமல், பகவானிடம் கூறி பலனடையுங்கள்.

* நடிகன் பல வேஷம் போட்டாலும், ஆள் ஒருத்தன் தான். அதேபோல் எத்தனை ஜீவராசிகள் இருந்தாலும், அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள் சுவாமி ஒருத்தர் தான்.

* கவலை, குறை மட்டும் தான் பாரம் என்றில்லை, தன்னைப்பற்றிய பெருமையும் பெரிய பாரம் தான். அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.

-காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us