ADDED : மார் 31, 2013 10:03 AM

* பக்தியுடன் தினமும் கால் மணிநேரமாவது வீட்டில் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* ராமாயணம், மகாபாரதம் போன்ற ஆன்மிக நூல்களை படிக்க கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள். இதனால் தெய்வீக சம்பந்தம் உண்டாகும்.
* கல்வி முறையில் தர்மம், நீதி, தெய்வ நம்பிக்கை போன்ற நன்னெறி போதனைகளுக்கு உரிய இடமளிக்க வேண்டும்.
* மனதிற்கு கட்டுப்பாடு என்னும் மூக்கணாங்கயிறு கட்டினால் தான் வாழ்வு ஒழுங்குடன் அமையும்.
* மற்றவர்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் நாமாகவே மனதை நல்வழிப்படுத்துவதில் தான் அழகும் கவுரவமும் அடங்கியிருக்கிறது.
* நம் பண்பாட்டில் இருக்கும் நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் இருக்கிறது.
* பொழுதுபோக்கு என்ற பெயரில் தரக்குறைவான விஷயங்களில் ஈடுபடுவது கூடாது. நல்ல பொழுதுபோக்கில் அறிவு வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் சரி பங்கு இருக்கும்.
- காஞ்சிப்பெரியவர்