Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/படித்தால் மட்டும் போதுமா!

படித்தால் மட்டும் போதுமா!

படித்தால் மட்டும் போதுமா!

படித்தால் மட்டும் போதுமா!

ADDED : ஏப் 09, 2013 10:04 AM


Google News
Latest Tamil News
* எந்தச் செயலையும் முறையோடு செய்ய வேண்டும். நியாயம் தவறும்போது தான் வாழ்வில் துன்பம் ஏற்படுகிறது.

* ஒருவருக்கு நியாயமாக இருப்பது இன்னொருவருக்கு நியாயமாக தோன்றுவது இல்லை. எனவே எல்லோரும் ஏற்கும் விதத்தில் பொது நியாயத்தைப் பின்பற்றுவது நல்லது.

* பகவத் கீதை உபதேசிப்பது போல, விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் நம் கடமைகளைச் சரிவரச் செய்து வர வேண்டும்.

* சமூகத்திற்கு தம்மால் முடிந்த நன்மைகளைச் செய்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாற்றினை படிப்பது இளைய சமுதாயத்திற்கு நல்ல தூண்டுகோலாக இருக்கும்.

* பணமும், பட்டமும், பதவியும் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அதை துறக்கும்போது ஏற்படும் அமைதி உயர்வானது.

* கல்வியின் பயன் மெய்ப்பொருளான கடவுளை அறிந்து கொள்வது தான். படித்தவர்கள், பக்தி இல்லாமல் இருப்பது பெருங்குறை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us