Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/சரீரம் எடுத்தது சாதனைக்கே!

சரீரம் எடுத்தது சாதனைக்கே!

சரீரம் எடுத்தது சாதனைக்கே!

சரீரம் எடுத்தது சாதனைக்கே!

ADDED : ஆக 19, 2008 07:18 PM


Google News
Latest Tamil News
<P>மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய் செய்வது பகிரங்கம். தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம். தானதர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்குத் தெரியும்படி செய்வதாகும். அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும். தியானத்திற்கு துணைசெய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், தூய்மை, புலனடக்கம், திருடாமை ஆகியவை, இந்த ஐந்து நற்குணங்களால் மனதை அடக்கினால் தியானம் எளிதில் கைகூடும்.<BR>அகிம்சை என்பது எல்லாவுயிர்களையும் அன்புமயமாகப் பாவிப்பதாகும். எண்ணம், சொல், செயல் இம்மூன்றாலும் உண்மைவழியில் நடப்பது சத்தியம். தூய்மை என்பது அகத்தூய்மை, புறத்தூய்மை ஆகிய இரண்டுமாகும். புலனடக்கம் என்பது புலன் களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும் . திருடாமை என்பது பிறர் பொருள் மீது ஆசைப்படாதிருப்பதாகும். இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். இச்சாதனைகளைச் செய்வதற்கே நாம் சரீரம் என்னும் உடம்பை பெற்றிருக்கிறோம். இந்த ஐந்து ஒழுக்க நெறிகளை 'சாமான்ய தர்மங்கள்' என்றே சாஸ்திரங்கள் சொல் கின்றன. சாமான்யம் என்றால் மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டியவை என்பது பொருள்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us